PL News-Tech News-18th september

Spread the love



டிக்-டாக்கிற்கு போட்டியாக களமிறங்கிய YouTube..! புதிய செயலி அறிமுகம்
டிக்-டாக் நிறுவனத்திற்கு போட்டியாக யூடியூப்(youtube) புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்துள்ளது. Shorts என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி, முதலில் இந்தியாவிலும், அடுத்தடுத்து மற்ற நாடுகளிலும் அறிமுகமாக இருக்கிறது.
Shorts செயலியின் மூலம் பயனர்கள் 15 நொடி வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும். ஏற்கனவே ரீல்ஸ்(reels) என்னும் வீடியோ பதிவேற்றும் செயலியை இன்ஸ்டாகிராம்(instagram) அறிமுகம் செய்த நிலையில், ஷார்ட்ஸ் செயலியோடு யூடியூப் களமிறங்கியுள்ளது.

கார்களின் வாடகைக் கட்டணங்களை ஒப்பிடும் புதிய செயலி அறிமுகம்
இரு இளம் தொழில்முனைவர்களால் தொடங்கப்பட்ட ‘ஸ்பர்’(spur) எனப்படும் இந்தச் செயலி, கார் சேவை வழங்கும் கம்ஃபர்ட்டெல்குரோ, கிராப்(grab), கோஜெக்(gojek) ஆகிய மூன்று நிறுவனங்கள் விதிக்கும் கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்க்க வகை செய்கிறது
இதன் மூலம் கார் பயணத்திற்கு முன்பாக ஒவ்வொரு செயலிக்கும் தனித்தனியாக சென்று அது விதிக்கும் கட்டணத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. ‘ஸ்பர்’ செயலியிலேயே எந்த கார் சேவை வழங்குநர் மலிவான கட்டணத்தை விதிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

வேலை தேடுபவர்களுக்கு ‘Kormo Jobs’ செயலியை அறிமுகம் செய்த கூகிள்!!
கூகுள் நிறுவனம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில், புதிதாக கோர்மோ ஜாப்ஸ் (Kormo Jobs) என்ற செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இதில் யார் வேண்டுமானாலும் தங்களுக்கு ஒரு சுயவிவரத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இதில் ரெஸ்யூம்(resume) உருவாக்கியப் பின், அதற்கு ஏற்ற வேலைகளையும் தேடி பயன்பெற முடியும்.

புதிய Google டிரைவ் Trash கொள்கை
கூகுள் நிறுவனம் தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி online file சேமிப்பக தீர்வுகளுக்கான Cloud Storage மாதிரியில் சில மாற்றங்களை கூகுள் நிறுவனம் வரும் நாட்களில் செய்யவுள்ளது என்று அறிவித்துள்ளது.
கூகுள்(google) நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அக்டோபர் 13, 2020 முதல், Google டிரைவ்(drive) Trash இல் உள்ள டெலீட்டட்(deleted) பொருட்களுக்கான தக்கவைப்புக் கொள்கைகளை மாற்றுகிறோம் என்று கூறியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் புதிய கொள்கைப்படி, Google டிரைவ் டிராஷ்(trash) தொட்டியில் வைக்கப்படும் டெலீட் செய்யப்பட்ட எந்த கோப்பாக இருந்தாலும் 30 நாட்களுக்குப் பிறகு தானாகவே நீக்கப்படும் என்று கூகுள் அறிவித்துள்ளது.

Google ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட Paytm.. அதில் உள்ள பணம் என்ன ஆகும்..!!
Paytm என்பது, இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பேமெண்ட் சேவை ஆகும். மிகப் பெருய ஸ்டார் அப் நிறுவனமான பேடிஎம் (Paytm) நிறுவனம் கூகிள் ப்ளே ஸ்டோர் கொள்கை விதிகளை மீறுவதாக கூறி, கூகிள் நிறுவனம் பேடிஎம் செயலியை ப்ளே ஸ்டோரில்(play store) இருந்து நீக்கியுள்ளது.
எனினும் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு டிஜிட்டல் முறையிலான பேமெண்டில் அதிகம் பயன்படுத்தப்படும் பேடிஎம் (Paytm) செயலி விரைவில் google ப்ளே ஸ்டோரில் மீண்டும் கொண்டு வரப்படும் எனவும் அதில் உள்ள வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும், வாடிக்கையாளர்கள் அதனை தொடர்ந்து பயன்படுத்தலாம் எனவும் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
Paytm, ப்ளே ஸ்டோரில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *